விளம்பரம்
முகப்புகோலிவுட்

"சந்தானம் நல்ல டான்ஸர்" புகழ்ந்து தள்ளும் இயக்குநர் செல்வராகவன்

  | March 15, 2017 11:19 IST
Mannavan Vanthanadi

துனுக்குகள்

  • சிம்புவால் அறிமுகம் செய்யப்பட்டார் சந்தானம்
  • காமெடியில் கலக்கிய இவர் பின்பு கதாநாயகனாக உருமாறினார்
  • முதல் முறையாக இணையும் சந்தானம் - இயக்குநர் செல்வராகவன் கூட்டணி
நடிகர் சந்தானம் ஒரு நல்ல டான்ஸர் என்று இயக்குநர் செல்வராகவன் பாராட்டியுள்ளார். காமெடி நடிகராக தமிழ் திரையுலகில் கால் பதித்த நடிகர் சந்தானம், சமீப காலமாக கதாநாயகனாகி பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி படு பிஸியாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இயக்குநர் செல்வராகவன் இயக்கும் ‘மன்னவன் வந்தானடி’ என்ற திரைப்படத்திலும் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை அதிதி போகங்கர் நடித்து வருகிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் சந்தானத்துக்கு அறிமுக பாடல் ஒன்றினை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துக் கொடுத்துள்ளாராம்.
 

இப்பாடலுக்கு நடிகர் சந்தானம் ஆடிய நடனம் இயக்குநர் செல்வராகவனை மிகவும் கவர்ந்துள்ளதாம். அவருக்குள் இப்படியொரு நடனத் திறமை ஒளிந்திருந்ததை கண்டு வியந்த இயக்குநர் செல்வராகவன், சந்தானம் ஒரு சிறந்த நடிகர் மட்டும் அல்ல அவர் ஒரு நல்ல டான்சரும் கூட என்று கூறியுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்