முகப்புகோலிவுட்

‘செம போத ஆகாதே’ படத்தின் புதிய டிரெய்லரை ஷேரிட்ட அதர்வா

  | May 11, 2018 18:21 IST
Semma Botha Aagathey Movie

துனுக்குகள்

  • இதில் மிஷ்டி, அனைகா சொட்டி என டபுள் ஹீரோயின்ஸாம்
  • இதனை அதர்வாவே தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்
  • படத்தை வருகிற மே 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
ஓடம் இளவரசின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செம போத ஆகாதே’. இப்படத்தை ‘பாணா காத்தாடி’ புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். அதர்வாவுக்கு ஜோடியாக மிஷ்டி, ‘காவியத் தலைவன்’ புகழ் அனைகா சொட்டி என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை அதர்வாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘KICKASS எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் புதிய டிரெய்லரை அதர்வா ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற மே 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    தொடர்புடைய விடியோ

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்