முகப்புகோலிவுட்

இரு மொழிகளில் உருவாகியிருக்கும் ஷாமின் 'காவியன்' ஃபர்ஸ்ட் லுக் டீஸர்

  | February 10, 2018 11:55 IST
Kaaviyyan First Look Teaser

துனுக்குகள்

  • ஷாம் கைசவம் 2 படங்கள் உள்ளது
  • இதன் ஷூட்டிங் முழுவதும் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளதாம்
  • ஹீரோயினாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளார்
‘ஆக்ஸிஜன்’ படத்திற்கு பிறகு ஷாம் கைவசம் ‘பார்ட்டி’ மற்றும் ‘காவியன்’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘காவியன்’ படத்தை சாரதி என்பவர் இயக்கி வருகிறார். ஹீரோயினாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஷியாம் மோகன் இசையமைத்து வரும் இதற்கு ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், அருண் தாமஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘2M சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் கே.வி.சபரிஷ் தயாரித்து வருகிறார்.
 

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு (வாடு ஒஸ்தாடு) என 2 மொழிகளில் உருவாகி வரும் இதன் ஷூட்டிங் முழுவதும் அமெரிக்காவில் நடைபெற்றதாம். தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்