விளம்பரம்
முகப்புகோலிவுட்

கீர்த்தி சுரேஷின் தோழி ஆன ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகி

  | September 12, 2017 11:16 IST
Nadigaiyar Thilagam

துனுக்குகள்

  • 1950,60-களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சாவித்ரி
  • இதில் ‘சாவித்ரி’யின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்
  • ‘அர்ஜுன் ரெட்டி’ டோலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாரை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். சாவித்ரி 1950,60-களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்து பல அற்புதமான படங்களில் நடித்துள்ளார். ஆகையால், ரசிகர்களுக்கு படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது.

இதில் சாவித்ரியின் கேரக்டரில் கீர்த்தி சுரேஷும், ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். சமந்தா ரிப்போர்டராக வலம் வரவுள்ளாராம். அவருக்கு ஜோடியாக ‘பெல்லி சூப்புலு’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். தற்போது, சாவித்ரியின் தோழி ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘வைஜெயந்தி மூவீஸ் - ஸ்வப்ன சினிமா’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
ஒளிப்பதிவாளராக டேனி சஞ்செஸ்-லோபெஸ் (DANI SANCHEZ-LOPEZ) என்பவர் பணியாற்றி வருகிறார். படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்