விளம்பரம்
முகப்புகோலிவுட்

துல்கர் சல்மானுடன் டூயட் ஆடப்போகும் ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகி

  | October 12, 2017 14:42 IST
Shalini Pandey

துனுக்குகள்

  • டோலிவுட்டில் ‘அர்ஜுன் ரெட்டி’ சூப்பர் ஹிட்டானது
  • ஷாலினி பாண்டே கைவசம் 3 படங்கள் உள்ளது
  • இதில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. ஷாலினி பாண்டே என்பவர் ஹீரோயினாக அறிமுகமாயிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ (தெலுங்கில் ‘மகாநதி’) படத்தில் ஜமுனா கேரக்டரிலும், ‘100% காதல்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாகவும் ஷாலினி பாண்டே நடித்து வருகிறார்.

தற்போது, ஷாலினி பாண்டேவின் கால்ஷீட் டைரியில் மற்றுமொரு புதிய தமிழ் படம் இணைந்துள்ளது. ரா.கார்த்திக் என்பவர் இதனை இயக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இதில் துல்கருக்கு ஜோடியாக நான்கு ஹீரோயின்ஸாம். அதில் ஒரு நாயகியாக நடிக்க ஷாலினியிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ‘கெனன்யா பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஜே.செல்வக்குமார் தயாரிக்கவுள்ளார்.

தீன் தயாள் இசையமைக்கவுள்ள இதற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். படத்தின் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்கத் திட்டமிட்டுள்ளனராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்