விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஷங்கரின் 'இந்தியன் 2' அப்டேட்

  | November 14, 2017 15:12 IST
Indian 2 Cast

துனுக்குகள்

  • 'இந்தியன்' முதல் பாகம் மெகா ஹிட்டானது
  • இப்படத்தை ஏ.எம்.ரத்னமே தயாரிக்கவிருக்கிறார்
  • படப்பிடிப்பை 2019 மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்
விக்ரமின் 'ஐ' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார்.

1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். பார்ட்-1 மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். முதல் பாகத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னமே தயாரிக்கவுள்ளாராம்.

‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ள இதற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்த படப்பிடிப்பையும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்