முகப்புகோலிவுட்

சிரிஷ் நடிக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ பட டிரெய்லர்

  | September 12, 2018 00:17 IST
Raja Ranguski Movie

துனுக்குகள்

 • இதில் சிரிஷுக்கு ஜோடியாக சாந்தினி டூயட் பாடி ஆடியுள்ளார்
 • இதன் டீசர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது
 • இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்
‘பர்மா, ஜாக்சன் துரை’ படங்களுக்கு பிறகு இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’. இதில் ஹீரோவாக ‘மெட்ரோ’ புகழ் சிரிஷ் நடித்துள்ளார். சிரிஷுக்கு ஜோடியாக ‘சித்து +2’ புகழ் சாந்தினி டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ புகழ் அனுபமா குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

‘வாசன் புரொடக்ஷன்’ நிறுவனத்துடன் இணைந்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பர்மா டாக்கீஸ்’ மூலம் தரணிதரனே இதனை தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு யுவா என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சஃபிக் முகமது அலி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்'ஸை குவித்து வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்