விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஸ்ரேயா கோஷலுக்கு 'மேடம் டுசாட்ஸில்' மெழுகு சிலை

  | March 17, 2017 14:39 IST
Celebrities

துனுக்குகள்

  • மேடம் டுஸாட்ஸ் 23வது கிளை இந்தியாவில் துவங்கப்படவுள்ளது
  • பல பிரபலங்களின் சிலைகளும் இடம்பெற உள்ளன
  • ஜூன் மாதம் தலைநகர் தில்லியில் திறக்கப்படவுள்ளது
இந்திய நாட்டின் தலைநகர் புது தில்லியில் விரைவில் திறக்கப்படவுள்ள இந்தியாவின் முதல் 'மேடம் டுஸாட்ஸ்' அருங்காட்சியகத்தில் பிரபல இந்திய பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் மெழுகு சிலை இடம்பெறவுள்ளதாம். இவருடைய சிலை, பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், அமெரிக்க பாப் சிங்கர் லேடி காகா ஆகியோரின் சிலைக்கு அருகில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வு குறித்து கோஷல் பேசுகையில், "மகிழ்ச்சியாக உள்ளது 'மேடம் டுஸாட்ஸ்’ வரலாற்றில் எனக்கும் ஒரு இடம் கிடைப்பது எண்ணுகையில் பெருமையாக உள்ளது. மிகப் பிரம்மாண்டமான நட்சத்திரங்கள், வரலாற்று படைத்தவர்களுக்கு இடையே நானும் இடம்பெற போவது மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன்" என்றார். 

வரும் ஜூன் மாதம் திறக்கப்படவுள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வரலாறு, இசை, திரைப்படம், தொலைகாட்சி, விளையாட்டு, அரசியல் என பல முக்கிய பிரபலங்களின் மெழுகு சிலைகள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் உள்ள பிரபலமான ’மேடம் டுஸாட்ஸ்’ நிறுவனத்தின் 23-வது கிளை இந்திய நாட்டில் துவங்கப்படவுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்