முகப்புகோலிவுட்

நடிகை ஸ்ரேயாவுக்கு மார்ச்சில் திருமணமா?

  | February 07, 2018 15:37 IST
Shriya Saran

துனுக்குகள்

  • ரஜினி, விஜய் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா
  • இவர் நடித்திருக்கும் 'காயத்ரி' இந்த வாரம் வெளியாகவிருக்கிறது
  • இவருக்கும் ரஷ்ய காதலருக்கும் திருமணம் என்று பேசப்பட்டு வருகிறது
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி சினிமாக்களில் நடித்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்திருப்பவர், தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் `நரகாசூரன்', பிரகாஷ்ராஜ் இந்தியில் இயக்கும் `தட்கா' (`உன் சமையல் அறையில்' படத்தின் இந்தி ரீமேக்) ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தெலுங்கில் நடித்திருக்கும் `காயத்ரி' படம் இந்த வாரம் வெளியாகவிருக்கிறது.

இந்த சூழலில், ஸ்ரேயாவுக்கும், அவரது ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்தத் திருமணம் ராஜஸ்தானில் நடக்கவிருக்கிறது, தற்போது ஸ்ரேயா தனது காதலரது குடும்பத்தை சந்திக்க சென்றிருக்கிறார் என ஒரு தகவல் வெளியானது. ஆனால், இந்த செய்தி பொய்யானது என ஸ்ரேயா தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"ராஜஸ்தானில் அவரது தோழியின் திருமணம் மார்ச் மாதமும், உறவினர் ஒருவரது திருமணமும் இந்த மாதத்திலும் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா, அதற்காக சில நகைகளும், உடைகளும் ஆர்டர் செய்திருக்கிறார். இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, வதந்திகள் பரவி வருகிறது" என ஸ்ரேயாவின் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அவரது தாயார் நீர்ஜா
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்