முகப்புகோலிவுட்

கன்னட திரையுலகில் என்ட்ரியாகப்போகும் ஸ்ருதி ஹாசன்

  | October 05, 2017 18:00 IST
Shruti Haasan Next Film

துனுக்குகள்

  • ‘லக்’ எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமானார் ஸ்ருதி
  • இதில் ஹீரோவாக துருவா சார்ஜா நடிக்கவுள்ளார்
  • இயக்குநர் கூறிய கதை ஸ்ருதிக்கு மிகவும் பிடித்து விட்டதாம்
‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், 2009-ஆம் ஆண்டு ஹீரோயினாக ‘லக்’ எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமானார். 2011-ஆம் ஆண்டு ‘ANANGANAGA O DHEERUDU & 7-ஆம் அறிவு’ படங்களின் மூலம் டோலிவுட் மற்றும் கோலிவுட்டிலும் என்ட்ரியானார் ஸ்ருதி. இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பல வெற்றிபப் படங்களில் நடித்துள்ளார். தற்போது, கமல்ஹாசன் நடித்து, இயக்கி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் ஸ்ருதி நடிக்கிறார்.

இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் கன்னட திரையுலகில் என்ட்ரியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோவாக துருவா சார்ஜா நடிக்கவுள்ளார். ‘POGARU’ என டைட்டிலிட்டுள்ள இதனை நந்தா கிஷோர் இயக்கவுள்ளாராம். இப்படத்தில் துருவா சார்ஜாவுக்கு ஜோடியாக டூயட் பாடி ஆட ஸ்ருதி ஹாசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

இயக்குநர் நந்தா கிஷோர் கூறிய கதை ஸ்ருதிக்கு மிகவும் பிடித்து விட்டதாம். ஆதலால், ஸ்ருதி நிச்சயம் கிரீன் சிக்னல் கொடுத்து விடுவார் என படக்குழு எதிர்பார்க்கிறது. அர்ஜுன் ஜான்யா இசையமைக்கும் இதற்கு வைத்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படுமாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்