முகப்புகோலிவுட்

உங்க மூஞ்சியெல்லாம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம் – சித்தார்த்தின் டிவிட்

  | January 08, 2018 12:18 IST
Siddharth Tweets

துனுக்குகள்

  • ‘அவள்’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் வெளியானது
  • இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • சித்தார்த்தின் டிவிட்டால் ரசிகர்கள் கொந்தளித்து கமெண்ட்ஸ்
‘ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு பிறகு சித்தார்த் நடித்து சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் வெளியான படம் ‘அவள்’. மிலிந்த் ராவ் இயக்கியிருந்த இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா டூயட் பாடி ஆடியிருந்தார். கிரீஷ் இசையமைத்திருந்த இதற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருந்தார், லாரென்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

‘VIACOM18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சித்தார்த் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஏடாகி எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்திருந்தார். ஹாரர் ஜானரை கொண்ட இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “இப்படத்தை திரையரங்கில் பார்க்க தவறியவர்கள், இதோ ‘நெட்ஃபிளிக்ஸ்’யில் பார்த்து மகிழுங்கள்” என்று ஸ்டேட்டஸ் தட்டியிருந்தார். இதற்கு ஒரு ரசிகர் “தமிழ்ராக்கர்ஸ் எப்பவும் எங்கள கை விட்டது இல்ல ப்ரோ” என பதில் டிவிட் தட்டினார்.
 


அதனால், கோபமடைந்த சித்தார்த் “உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம்” என்று பதிவிட்டார். இந்த டிவிட்டிற்கு பல ரசிகர்கள் கொந்தளித்து கமெண்ட்ஸ் தட்டி வருகின்றனர். இன்னொரு ரசிகர் ஒருவர் “என்ன தான் இருந்தாலும் நீங்கள் கூறியது தவறு” என்று கேட்க, அதற்கு சித்தார்த் “இதையே நீங்கள் ‘என்ன தான் இருந்தாலும் பைரசி தவறு’ என்று கூறியிருந்தால் நல்லா இருந்திருக்கும்” என்று டிவிட்டினார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்