விளம்பரம்
முகப்புகோலிவுட்

சித்தார்த்தின் ‘அவள்’ ஹாரர் பட டிரையிலர்

  | October 09, 2017 17:28 IST
Aval Trailer

துனுக்குகள்

  • இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகுகிறது
  • சித்தார்த் நரம்பியல் நிபுணராக வலம் வரவுள்ளார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் நல்ல வரவேற்பை பெற்றது
‘ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு பிறகு சித்தார்த் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’. ஒரே நேரத்தில் தமிழ் (அவள்), தெலுங்கு (GRUHAM) மற்றும் ஹிந்தி (THE HOUSE NEXT DOOR) ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா டூயட் பாடி ஆடியுள்ளார்.

சித்தார்த் நரம்பியல் நிபுணராக வலம் வரவுள்ளாராம். ‘VIACOM18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சித்தார்த் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஏடாகி எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து வருகிறார். ஏற்கெனவே, தமிழ் சினிமாவில் பேய்ப் படங்கள் வந்த வண்ணமிருக்க இதுவும் ஹாரர் ஜானராம். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
 

சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரையிலரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற நவம்பர் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்