விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஸ்பெயின் பறக்கவுள்ள ‘சைத்தான்’

  | May 15, 2017 20:55 IST
Movies

துனுக்குகள்

  • சித்தார்த் கைவசம் 3 படங்கள் உள்ளது
  • ‘கப்பல்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்
‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு சித்தார்த் தமிழில் கார்த்திக்கின் ‘சைத்தான் கா பச்சா’, மிலிந்த் ராவ்வின் ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’, மலையாளத்தில் ரதீஸ் அம்பட்டின் ‘கம்மார சம்பவம்’ ஆகிய 3 படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். இதில் ‘சைத்தான் கா பச்சா’ படத்தை ‘கப்பல்’ பட புகழ் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கி வருகிறார். சித்தார்த்துக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார்.

சித்தார்த்துக்கு எதிரான வில்லன் வேடத்தில் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். மேலும், கருணாகரன், தம்பி ராமையா, யோகி பாபு, கஞ்சா கருப்பு, பகவதி பெருமாள் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறதாம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ஸ்பெயின் நாட்டிற்கு செல்லவுள்ளது படக்குழு. இங்கு பிரம்மாண்டமாக போடப்பட்டு வரும் செட்டில் ஒரு பாடல் காட்சியை படமாக்கத் திட்டமிட்டுள்ளனராம். இன்னொரு புறம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் சமீபத்தில் துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் விரைவில் ட்விட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்