முகப்புகோலிவுட்

இறுதிக்கட்டத்தில் சித்தார்த்தின் ‘சைத்தான் கா பச்சா’

  | November 07, 2017 16:25 IST
Karthik G. Krish

துனுக்குகள்

  • சித்தார்த் கைவசம் 2 படங்கள் உள்ளது
  • ‘கப்பல்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்
தீரஜ் வைத்தியின் ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு சித்தார்த் நடித்து கடந்த வாரம் வெளியான படம் ‘அவள்’. மிலிந்த் ராவ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சித்தார்த் கைவசம் தமிழில் ‘சைத்தான் கா பச்சா’ மற்றும் மலையாளத்தில் ‘கம்மார சம்பவம்’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘சைத்தான் கா பச்சா’ படத்தை ‘கப்பல்’ பட புகழ் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கி வருகிறார்.

சித்தார்த்துக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார். சித்தார்த்துக்கு எதிரான வில்லன் வேடத்தில் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். மேலும், கருணாகரன், தம்பி ராமையா, யோகி பாபு, கஞ்சா கருப்பு, பகவதி பெருமாள் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறதாம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையிலுள்ள ‘FORUM MALL’-யில் நடந்தது. அங்குள்ள ‘PALAZZO’ திரையரங்கில் படத்தில் இடம்பெறும் மிக முக்கிய காட்சி ஒன்று இரவு நேரத்தில் படமாக்கப்பட்டதாம். வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்