விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஓவியாவை திருமணம் செய்ய விருப்பமா? – நடிகர் சிம்புவின் அறிக்கை

  | August 07, 2017 18:12 IST
Simbu Tweets

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்
  • ஓவியா கடந்த வாரம் இறுதியில் ‘பிக் பாஸ்’ வீட்டைவிட்டு வெளியேறினார்
  • ஓவியாவை பற்றி சிம்பு டிவிட்டியதாக செய்திகள் பரவி வருகிறது
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ஷோவில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான ஓவியா கடந்த வாரம் இறுதியில் ‘பிக் பாஸ்’ வீட்டைவிட்டு வெளியேறினார். இந்நிலையில், ஓவியாவை திருமணம் செய்துகொள்ள ரெடி என நடிகர் சிம்பு டிவிட் செய்துள்ளார் என தகவல் பரவி வருகிறது.
 
தற்போது, இது குறித்து சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்த போலி செய்திக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அவர்களை இறுதியாக எச்சரிக்கிறேன்” என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். மேலும், ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் எனது பெயரில் உள்ள போலியான அக்கௌண்ட்டுகளால் பரப்பப்படும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். என் தரப்பில் இருந்து வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே மீடியாக்கள் வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்