விளம்பரம்
முகப்புகோலிவுட்

மணிரத்னம் படத்தில் இணைந்த ‘யங் சூப்பர் ஸ்டார்’

  | September 10, 2017 17:32 IST
Mani Ratnam Next Film

துனுக்குகள்

  • இப்படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்கவுள்ளார்
  • இதில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது
  • இன்னும் 5 முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு பிறகு சிம்புவே இயக்கி, நடிக்கவுள்ள படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிம்பு மற்றுமொரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, துல்கர் சல்மான், நானி, ஃபகத் ஃபாஸில் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஹீரோயின்களாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருப்பதை சமீபத்தில் உறுதி செய்தனர்.

இயக்குநர் மணிரத்னமே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மூலம் தயாரிக்கவுள்ள இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்