விளம்பரம்
முகப்புகோலிவுட்

தனுஷைத் தொடர்ந்து கதாநாயகனுக்கு கைகொடுத்த சிம்பு

  | May 19, 2017 21:56 IST
Simbu

துனுக்குகள்

  • விஷ்ணு கைவசம் 4 படங்கள் உள்ளது
  • படத்தின் கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் வைரலானது
  • விஷ்ணுவிற்காக நடிகர் சிம்பு குரல் கொடுத்துள்ளார்
‘மாவீரன் கிட்டு’ படத்திற்கு பிறகு விஷ்ணு நடித்த சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ பல மாதங்களாக வெளியீட்டிற்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. தற்போது, முருகானந்தமின் ‘கதாநாயகன்’, ராமின் ‘மின்மினி’, செல்லாவின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய 3 படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். இது மட்டுமின்றி கைவசம் தெலுங்கு ‘பெல்லி சுப்புலு’ ரீமேக்கான செந்தில் வீராசாமியின் ‘பொன் ஒன்று கண்டேன்’ படமும் உள்ளது.

இதில் ‘கதாநாயகன்’ படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்ரின் திரசா நடித்து வருகிறார். மேலும், கலகல காமெடியில் அசத்த சூரி நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்து வரும் இதற்கு ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீதரன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விஷ்ணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ மூலம் இதனை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில் படத்தின் கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை கோலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்ட தனுஷ் ட்விட்டினார்.
 
simbu vishnu vishal

இந்த போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்ததோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில், படத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் உள்ள முக்கியமான வாய்ஸ் ஓவருக்கு நடிகர் சிம்பு குரல் கொடுத்துள்ளாராம். இதை விஷ்ணுவே தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவுடன் க்ளிக்கிய செல்ஃபி ஒன்றை ஷேரிட்டு ஸ்டேட்டஸ் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். படத்தை ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளதாம். வெகு விரைவில் டீசர், ஆடியோ மற்றும் டிரையிலர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்விட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்