முகப்புகோலிவுட்

"சிம்புவா இது!?" ஆச்சர்யத்தில் கோலிவுட் வட்டாரம்

  | March 14, 2018 15:55 IST
Chekka Chivantha Vaanam Cast

துனுக்குகள்

  • மணிரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் சிம்பு நடிக்கிறார்
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • படப்பிடிப்பு தளத்திற்கு சிம்பு மிக தாமதமாக வருவார் என்று கூறப்படும்
கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘செக்கச்சிவந்த வானம்’. இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, தியாகராஜன், ஜெயசுதா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறதாம். விஜய் சேதுபதி போலீஸாக வலம் வரவுள்ளார்.

‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

திரையுலகில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் நடிகர் சிம்பு. பொதுவாகவே படப்பிடிப்பு தளத்திற்கு சிம்பு மிக தாமதமாக வருவார் என்று கூறப்படும். இவர் மணிரத்னம் படத்தில் நடிக்கப்போகிறார் என்று செய்தி வந்தபோதே, கோலிவுட்டில் அனைவரும் ஷாக்கானார்கள். இந்நிலையில், ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வெகு சீக்கிரமே சிம்பு வந்து விடுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவரது இந்த நடவடிக்கை, சிம்புவா இது? என அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்