முகப்புகோலிவுட்

யங் சூப்பர் ஸ்டாரின் நியூ லுக் - சர்ப்ரைஸ் வீடியோ

  | November 13, 2017 14:32 IST
Str Next Film

துனுக்குகள்

  • சிம்பு கைவசம் இரண்டு படங்கள் உள்ளது
  • ‘சக்க போடு போடு ராஜா’விற்கு சிம்பு தான் இசையமைத்திருந்தார்
  • சிம்பு தரப்பில் இருந்து ஒரு செல்ஃபி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தானே இயக்கி நடிக்கவிருக்கும் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் பிஸியாகவுள்ளார். இதனையடுத்து இயக்குநர் மணிரத்னமின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில், சிம்பு சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’விற்கு இசையமைத்திருந்தார்.
 

இதன் பாடல்கள் மற்றும் டிரையிலர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது. இந்நிலையில், சிம்பு தரப்பில் இருந்து ஒரு செல்ஃபி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிம்பு பேசுகையில் “எல்லாருக்கும் வணக்கம். ‘சக்க போடு போடு ராஜா’வின் பாடல்கள் மற்றும் டிரையிலருக்கு மிகப் பெரிய வரவேற்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. ரொம்ப நாள் ஆச்சு உங்கள் அனைவரிடமும் பேசி. இது என்னுடைய படத்துக்கான புது கெட்டப் எல்லாம் கிடையாது. வேறு ஒரு விஷயம் விரைவில் வருது. வருவேன். நம்புங்க” என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்