முகப்புகோலிவுட்

வெளியானது சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ டீசர்

  | December 01, 2018 13:57 IST
Simbu

துனுக்குகள்

  • ‘அட்டாரிண்டிகி தாரேடி’ தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது
  • இப்படத்தின் தமிழ் ரீமேக்கை சுந்தர்.சி இயக்குகிறார்
  • இதில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் டூயட் பாடி ஆடி வருகிறார்
தெலுங்கில் 2013-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அட்டாரிண்டிகி தாரேடி'. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்த இப்படத்தில் ஹீரோவாக ‘பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கதாநாயகனாக சிம்பு நடிக்கிறார்.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். சிம்புவுக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா' புகழ் மேகா ஆகாஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் பிரபு, கேத்ரின் திரசா, ரம்யா கிருஷ்ணன், மஹத் நடிக்கின்றனர்.
 

இதற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், இன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்