முகப்புகோலிவுட்

"நீங்க பார்க்கறதுலாம் கம்மி... நிறைய சண்டைகள் நடக்கும்" - பிக் பாஸ் பற்றி மனம்திறந்த ரம்யா

  | July 24, 2018 16:50 IST
Singer Ramya

துனுக்குகள்

  • பிக் பாஸ் சீசன் 2 ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது
  • சென்ற சீசன் போலே இந்த சீசனிலும் நிறைய பரபரபப்புகள்
  • இந்த வாரம் நிகழ்சியிலிருந்து ரம்யா வெளியேற்றப்பட்டார்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 2. சென்ற சீசன் போலவே இதிலும் நிறைய விளையாட்டுகள், டாஸ்க், சண்டைகள் இருக்கத்தான் செய்கிறது. மமதி, அனந்த் வைத்தியநாதன், நித்யா ஆகியோர் ஒவ்வொரு வாரமும் முறையே எலிமினேட் ஆனார்கள். தற்போது பாடகி ரம்யா என்.எஸ்.கே வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரம்யா. அதில், "எல்லாத்துக்கும் முதல்ல நான் உங்க எல்லாருக்கும் நன்றி சொல்லணும்னுதான் இந்த வீடியோவே பண்ணியிருக்கேன். `பிக் பாஸ்'ல இருக்க வரைக்கும் எனக்கு இவ்வளோ சப்போர்ட் இருக்குன்னு எனக்குத் தெரியாது. என்னோட மைன்ட்ல இருந்த ஒரே விஷயம் நான் நானா இருக்கணும், நடிக்கக் கூடாது, மத்தவங்க முதுகுக்குப் பின்னால எதுவும் பேசக் கூடாதுனு இருந்தேன். ஆனா, என்னையும் மீறி ரெண்டு மூணு இடத்தில் கோபப்பட்டேன். ஆனா, என்னைப் பொறுத்தவரை அது நியாயமான கோபமாத்தான் நினைக்கறேன். அதை எல்லாத்தையும் நீங்க புரிஞ்சிக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
 
நிறைய மெயில், மெசேஜ் மூலமா நான் வெளிய வந்ததுக்காக வருத்தப்பட்டிருந்தீங்க. உண்மைய சொல்லணும்னா நான் வெளிய வந்ததுக்கு ரொம்பவே சந்தோஷப்படறேன். இதுக்கு மேல என்னால் அந்த வீட்டில் இருந்திருக்க முடியாது. ஏன்னா நிறைய போட்டி, பொறாமை, பின்னால பேசறதுனு நடந்துகிட்டிருந்தது. எல்லாத்தையும் தாண்டி நிறைய சண்டைகள் நடக்கும். நீங்க பார்க்கறது வெறும் ஒரு மணிநேரம்தான். ஆனா 24மணி நேரமும் நாங்க உள்ள இதையே அனுபவிச்சிட்டிருந்தோம். அதனால ரொம்ப கஷ்டமா இருந்தது. எனக்கு வெளிய வந்தது ரொம்ப சந்தோஷம், எனக்காக நீங்க எல்லாரும் சந்தோஷம்தான்படணும். உங்களுடைய ஆதரவுக்கு நன்றி, இது என்னைக்குமே எனக்குத் தேவை" என்றார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்