முகப்புகோலிவுட்

துவங்கியது சிவகார்த்திகேயன் - ராஜேஷ் படத்தின் படப்பிடிப்பு

  | July 12, 2018 15:30 IST
Sivakarthikeyan 13

துனுக்குகள்

  • ராஜேஷ் இயக்கும் படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்
  • இதில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார்
  • இது சிவகார்த்திகேயனின் கேரியரில் 13-வது படமாம்
கோலிவுட்டில் ‘சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இதனையடுத்து ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். இது சிவகார்த்திகேயனின் கேரியரில் 13-வது படமாம். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார். காமெடியில் கலக்க சதீஷ் நடிக்கவுள்ளார்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றவிருக்கிறார். சமீபத்தில், படத்திற்கான பூஜை போடப்பட்டது. தற்போது, படத்தின் ஷூட்டிங்கை இன்று (ஜூலை 12-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்