முகப்புகோலிவுட்

புதிய படத்திற்கு பூஜை போட்ட சிவகார்த்திகேயன்

  | May 02, 2018 16:45 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • ராஜேஷ் இயக்கும் படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்
  • இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார்
  • இதற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்
கோலிவுட்டில் ‘சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இதனையடுத்து ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.

ஏற்கெனவே, சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு இயக்குநர் எம்.ராஜேஷ் வசனம் எழுதியிருந்தார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார்.

இதற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, இன்று (மே 2-ஆம் தேதி) படத்தின் பூஜை போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்