முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘Mr.சந்திரமௌலி’ டைட்டில் லுக்

  | October 09, 2017 18:43 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • கார்த்திக் – கெளதம் இணைந்து நடிக்கும் முதல் படம்
  • இதில் ரெஜினா, வரலக்ஷ்மி என 2 ஹீரோயின்ஸாம்
  • ஷூட்டிங்கை நவம்பர் மாதம் சென்னையில் துவங்கவுள்ளனர்
விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் திரு இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி, பிரபல நடிகரும், கெளதம் கார்த்திக்கின் தந்தையுமான ‘நவரச நாயகன்’ கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதானாம்.

இப்படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கவுள்ளார். கெளதம் கார்த்திக்கு ஜோடியாக ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், காமெடியில் கலக்க சதீஷ் நடிக்கவிருக்கிறார். தற்போது, இதற்கு ‘Mr.சந்திரமௌலி’ என டைட்டில் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை வருகிற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் துவங்கவுள்ளனர். ஒரே ஷெடியூலில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம். வெகு விரைவில் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்