முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன் டிவிட்டிய ‘தானாய்’ சிங்கிள் டிராக்

  | October 11, 2017 22:22 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • இயக்குநராக பாலாஜி தரணீதரன் கைவசம் 2 படங்கள் உள்ளது
  • இப்படத்தில் காளிதாஸுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்
  • இதன் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ரிலீஸுக்கு தயாராகவுள்ள படம் ‘ஒரு பக்க கதை’. இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘சீதக்காதி’ எனும் படத்தை இயக்கவுள்ளார். ‘ஒரு பக்க கதை’ படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்துள்ளார்.

காளிதாஸுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் டூயட் பாடி ஆடியுள்ளார். கோவிந்த் மேனன் இசையமைத்துள்ள இதற்கு சி.பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘வான்சன் விஷுவல் வென்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கே.எஸ்.ஸ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தில் இடம்பெறும் ‘தானாய்’ எனும் சிங்கிள் டிராக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்