முகப்புகோலிவுட்

‘சீமராஜா’ படத்தில் இடம்பெறும் ‘மச்சக்கன்னி’ பாடல் வீடியோ

  | September 06, 2018 10:11 IST
Seema Raja Movie

துனுக்குகள்

  • இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதன் டிரெய்லர் & பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • படத்தை செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் கைவசம் பொன்ராமின் ‘சீமராஜா’, ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படங்கள் உள்ளது. இதில் ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார். இப்படத்திற்கென சமந்தா பிரத்யேகமாக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டாராம்.

மேலும், சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். கீர்த்தி சுரேஷ் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். டி.இமான் இசையமைத்துள்ள இதற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தில் இடம்பெறும் ‘மச்சக்கன்னி’ பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இப்பாடலின் வீடியோ ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்