விளம்பரம்
முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் ‘சூர்யா’ பட இயக்குநர்

  | August 10, 2017 10:17 IST
Sivakarthikeyan Next Film

துனுக்குகள்

  • சிவகார்த்திகேயன் கைவசம் மூன்று படங்கள் இருக்கிறது
  • ‘TSK’-வின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது
  • இதன் சேட்டிலைட் உரிமையை பிரபல சேனல் கைப்பற்றி விட்டதாம்
‘ரெமோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படங்கள் மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ மற்றும் பொன்ராம் படம். இது தவிர கைவசம் ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் படம் உள்ளது. தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ‘போடா போடி, நானும் ரௌடி தான்’ புகழ் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும், இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்போதே இதன் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ குழுமம் கைப்பற்றியுள்ளதாம். இதை ‘சன் டிவி’யே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ரிலீஸுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்திற்கான பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்