விளம்பரம்
முகப்புகோலிவுட்

லேடி சூப்பர் ஸ்டாருக்காக சிவகார்த்திகேயன் எடுத்த புதிய அவதாரம்

  | May 12, 2018 10:23 IST
Kolamaavu Kokila First Look Poster

துனுக்குகள்

  • நயன்தாரா கைவசம் 9 படங்கள் உள்ளது
  • இப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார்
  • இதன் ‘எதுவரையோ’ சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
பாலகிருஷ்ணாவின் ‘ஜெய் சிம்ஹா’ படத்திற்கு பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கைவசம் அஜித்தின் ‘விசுவாசம்’, அதர்வாவின் ‘இமைக்கா நொடிகள்’, சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்’, நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’, நெல்சன் திலீப்குமாரின் ‘கோலமாவு கோகிலா’, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’, மகேஷ் வெட்டியாரின் ‘கோட்டயம் குர்பானா’, அறிவழகன் படம், சர்ஜுன் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘கோலமாவு கோகிலா’ (கோகோ) படத்தில் முக்கிய வேடங்களில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வரும் இதற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்து வருகிறார், நிர்மல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் ‘எதுவரையோ’ சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெறும் ‘கல்யாண வயசு’ எனும் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அவதாரம் எடுத்திருக்கும் முதல் படம் இதுதானாம். இப்பாடலை வருகிற மே 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்