முகப்புகோலிவுட்

‘நெல்’ ஜெயராமன் காலமானார் – அவரது மகனின் கல்வி செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்

  | December 06, 2018 16:45 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • 170-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்டவர் ‘நெல்’ ஜெயராமன்
  • இவர் கடந்த 2 வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார்
  • சிகிச்சை பலனின்றி இன்று காலை ‘நெல்’ ஜெயராமன் காலமானார்
பாரம்பரிய நெல் விதைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், விவாசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் எடுத்துச் செல்வதில் மிக முக்கியமானவர் ‘நெல்' ஜெயராமன். இவர் மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

170-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்டவர் ‘நெல்' ஜெயராமன். இவர் கடந்த 2 வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். பின், சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 6-ஆம் தேதி) காலை ‘நெல்' ஜெயராமன் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், சில திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது, ‘நெல்' ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் செலவு மற்றும் அவரது மகனின் கல்வி செலவை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்