முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

  | June 03, 2019 17:48 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • கனா திரைப்படம் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு
  • தற்போது நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படத்தை தயாரித்து இருக்கிறார்
  • இவரது தயாரிப்பில் உருவாகும் மூன்றாவது படத்தை அருண் இயக்குகிறார்

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

இளம் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதத்தில் சிறந்த படைப்பாளிகளுக்கு இவரது தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் இவரது நண்பரான அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான "கனா" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது டிவி தொகுப்பாளராக இருக்கும் ரியோ நடிக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது, தான் தயாரிக்கும் அடுத்த படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்க உள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்தார். இதனைத் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.



    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்