முகப்புகோலிவுட்

ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டிய 'சீமராஜா' டீசர்

  | August 04, 2018 11:44 IST
Seema Raja Teaser

துனுக்குகள்

  • இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார்
  • '24 AM ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்
  • படத்தை செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் கைவசம் பொன்ராமின் ‘சீமராஜா’, ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படங்கள் உள்ளது. இதில் ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார். இப்படத்திற்கென சமந்தா பிரத்யேகமாக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டாராம்.

மேலும், சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். கீர்த்தி சுரேஷ் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டீசர் மற்றும் பாடல்களை ’24 AM’ நிறுவனம் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளது. இப்பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்