முகப்புகோலிவுட்

ரிலீஸ் தேதியைப் பெற்றது சிவகார்த்திகேயனின் 'சீமராஜா'

  | July 12, 2018 13:27 IST
Sivakarthikeyan Seema Raja

துனுக்குகள்

  • இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது
  • படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் கைவசம் பொன்ராமின் ‘சீமராஜா’, ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படங்கள் உள்ளது. இதில் ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார். இப்படத்திற்கென சமந்தா பிரத்யேகமாக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டாராம்.

மேலும், சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். கீர்த்தி சுரேஷ் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இதனை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சமீபத்தில்,வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, நடிகை சமந்தா மற்றும் நடிகர் சூரி தங்களது காட்சிகளுக்கான டப்பிங் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் பொன்ராமே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்