விளம்பரம்
முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன் – நயன்தாரா டூயட் பாடும் ‘வேலைக்காரன்’ டீஸர்

  | August 14, 2017 18:23 IST
Velaikkaran Teaser

துனுக்குகள்

  • சிவகார்த்திகேயன் கைவசம் 4 படங்கள் உள்ளது
  • சிவாவுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ டூயட் பாடி வருகிறார்
  • முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாஸில் நடிக்கிறார்
‘ரெமோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படங்கள் மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ மற்றும் பொன்ராம் படம். இது தவிர கைவசம் ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் படம் மற்றும் விக்னேஷ் சிவன் படம் உள்ளது. இதில் ‘வேலைக்காரன்’ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறாராம். மேலும், ஃபகத் ஃபாஸில், சிநேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, சதீஷ், விஜய் வசந்த் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறதாம்.

’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இதற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஏற்கெனவே, படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘சோனி மியூசிக்’ நிறுவனமும், சேட்டிலைட் உரிமையை ‘விஜய் டி.வி’யும் கைப்பற்றியது. சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மோகன் ராஜாவும், ஃபகத் ஃபாஸிலின் பர்த்டே ஸ்பெஷலாக செகண்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயனும் வெளியிட்டனர்.
 

இப்போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. படத்தை வருகிற செப்டெம்பர் 29-ஆம் தேதி ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாம் ‘வேலைக்காரன்’ டீம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்