விளம்பரம்
முகப்புகோலிவுட்

எஸ்.ஜே.சூர்யா – ‘மாயா’ இயக்குநர் கூட்டணி அமைத்துள்ள ‘இறவாக்காலம்’ டீஸர்

  | August 03, 2017 20:25 IST
Sj Suryah

துனுக்குகள்

  • ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸுக்கு ரெடியாகவுள்ளது
  • எஸ்.ஜே.சூர்யா கைவசம் 3 படங்கள் உள்ளது
  • ‘மாயா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா கதையின் நாயகனாக நடித்த செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ வெளியீட்டிற்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. தற்போது, கைவசம் அட்லி - விஜய் கூட்டணியில் ரெடியாகும் ‘மெர்சல்’, ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ் பாபு காம்போவில் உருவாகும் ‘ஸ்பைடர்’, ‘மாயா’ புகழ் அஸ்வின் சரவணனின் ‘இறவாக்காலம்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘இறவாக்காலம்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ‘அதே கண்கள்’ புகழ் ஷிவதா நாயர் டூயட் பாடி ஆடி வருகிறார்.

இன்னொரு ஹீரோயினாக ‘மாலை நேரத்து மயக்கம்’ வாமிகா நடிக்கிறார். ரான் யோஹான் இசையமைத்து வரும் இதற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ரொமாண்டிக் த்ரில்லரான இப்படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் என்.முரளி ராமசாமியுடன் இணைந்து ஹேமா ருக்மணி தயாரித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
 

சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட இதன் டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் டிரையிலர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்