விளம்பரம்
முகப்புகோலிவுட்

மெர்சலில் எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் லுக்

  | October 09, 2017 11:43 IST
Sj Suryah

துனுக்குகள்

  • இப்படம் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ரிலீஸாகவுள்ளது
  • இதில் எஸ்.ஜே.சூர்யா செம ஸ்டைலிஷான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்
  • எஸ்.ஜே.சூர்யாவின் இன்ட்ரோ காட்சி பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டதாம்
‘தெறி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் கூட்டணியில் ரெடியாகியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61-வது படமான இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் கிராமத்து தலைவர், டாக்டர், மேஜிஷியன் என 3 வேடங்களில் நடித்துள்ளார். விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என 3 ஹீரோயின்ஸாம்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா செம ஸ்டைலிஷான வில்லன் வேடத்தில் நடித்துள்ளாராம். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், வெளியான இதன் பாடல்கள், டீஸர் மற்றும் ப்ரோமோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, நாளுக்கு நாள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலும் அதிகரித்து வருகிறது.

தற்போது, எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் 15 ஷாட்களே கொண்ட எஸ்.ஜே.சூர்யாவின் இன்ட்ரோ காட்சியை ரூ.50 லட்சம் செலவில் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. படத்தை விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்