விளம்பரம்
முகப்புகோலிவுட்

என்னுடைய அனுமதி இல்லாமல் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டுள்ளது கொந்தளிக்கும் சோலோ இயக்குநர்

  | October 10, 2017 12:23 IST
Dulquer Salmaan

துனுக்குகள்

  • நான்கு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்
  • கிளைமேக்ஸ் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை
  • என்னுடைய அனுமதி இல்லாமலே இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது
இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘சோலோ’இப்படத்தில் நடிகைகள் தன்ஷிகா, ஆர்த்தி வெங்கடேஷ்,நேகா சர்மா, ஸ்ருதி ஹரிஹரன் என்று நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

நீர், நிலம், காற்று, நெருப்பு என்று நான்கு கதைக்களத்தில், நான்கு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்.

இந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என சினிமா விமர்சகர்கள் பலரும் கூறி இருந்தனர். தயாரிப்பு தரப்பு கிளைமேக்ஸ் காட்சிகளை மற்ற இயக்குனரிடம் அணுக மாற்ற மாட்டேன் என்று பிடிவாதமாக இயக்குநர் பிஜோய் நம்பியார் சொல்லிவிட்டாராம், அதனால் இயக்குநருக்கு தெரியாமலேயே கிளைமேக்ஸ் கட்சியை மாற்றியுள்ளதாம் தயாரிப்பு தரப்பு.
இது பற்றி கருத்து கூறிய பிஜோய் நம்பியார் “என்னுடைய அனுமதி இல்லாமலே இந்த நிகழ்வு நடக்கவில்லை. ஆனால் நான் எடுத்த திரைப்படத்தின் பக்கம் நிற்கிறேன். பரவலாக என்னுடைய திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதே எனக்கு மகிழ்ச்சி தான்” என்கிறார் இயக்குநர் பிஜோய் நம்பியார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்