விளம்பரம்
முகப்புகோலிவுட்

காப்புரிமை என்ற பெயரால் நண்பர்களுக்கிடையே வந்த விரிசல்

  | March 20, 2017 15:18 IST
Celebrities

துனுக்குகள்

  • தனது இசையுலகில் 50 ஆண்டுகளை கடந்து விட்டார் எஸ்.பி.பி
  • உலகம் முழுக்க எஸ்.பி.பி -50 என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது
  • எஸ்.பி.பி - இளையராஜா - வைரமுத்து - பாரதிராஜா ஆகிய நால்வரும் நண்பர்கள்
தமிழ் சினிமா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையும் தன்னுடைய குரல் வளத்தால் கட்டிப்போட்டவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

தன்னுடைய 50 வருட இசை பயணத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், இப்போது எஸ்.பி.பி-50 என்கிற பெயரில் உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்த திட்டமிட்டு கிட்டத்தட்ட 6 நாடுகளில் நடத்தி முடித்துள்ளார். அடுத்த கச்சேரி நிகச்சிக்காக இப்போது அமெரிக்காவில் இருக்கும் இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அப்பதிவில், தனக்கும், பாடகி சித்ராவுக்கும் மற்றும் கச்சேரி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வக்கில் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி மேடைகளில் பாடக்கூடாது என்றும் அதை மீறினால் மிகப்பெரிய தொகையை அபராதமாக கட்டவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
"சென்ற ஆண்டு கனடா நாட்டில் தொடங்கிய இந்நிகழ்ச்சி மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, இந்தியாவில் சில பகுதிகள் உட்பட இதுவரை 6 நாடுகளில் நடத்திய போது எதுவும் சொல்லாத இசையமைப்பாளர் இளையராஜா தற்போது அமெரிக்காவில் ஏன் இப்படி செய்கிறார் என தெரியவில்லை. இதனால் இனி அவரின் இசையில் வந்த பாடல்கள் எதையும் இனி பாடமாட்டேன். கடவுள் புன்னியத்தில் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடியுள்ளேன் அந்த பாடல்களை மட்டும் இனி பாடவிருக்கிறேன். இதற்கு ரசிகர்கள் ஒத்துழைக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
 

இதனிடையே ஏன் இசையமைப்பாளர் இளையராஜா இவ்வாறான முடிவை எஸ்.பி.பி அவர்களுக்கு எதிராக எடுத்தார் என்ற கேள்விக்கு சமீபத்தில் சென்னையில் நடந்த எஸ்.பி.பி - 50 நிகழ்ச்சிக்கு இளையராஜா அழைக்கபடவில்லை எனவும், அந்நிகழ்ச்சியில் எனது குரு பாடகர் யேசுதாஸ் தான் என்று கூறீய எஸ்.பி.பி, அவருக்கு பாத பூஜை வரை செய்தார் என்பதால் இளையராஜா கடும் கோபத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறதாம்.

எஸ்.பி.பி – இளையராஜா – கவிஞர் வைரமுத்து – இயக்குநர் பாரதிராஜா இந்த நான்கு பேரும் துவக்கத்தில் நல்ல நண்பர்கள் , ஒரே கால கட்டத்தில் தங்களது துறைகளில் ஒன்றாகவே வளர்ந்தனர் என்பதும், பின்னர் இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து முரன்பாடு காரணமாக முதலில் இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்குள் இருந்த நட்பிலிருந்து விலகினார் என்பதும், பின்னர் கவிஞர் வைரமுத்துவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக அவரும் இளையராஜாவிடம் இருந்து விலகினார் என்பதும், தற்போது இறுதியாக இருந்த எஸ்.பி.பி – இளையராஜா நட்பும் காப்புரிமை என்ற பெயரில் பிரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்