விளம்பரம்
முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயனின் வேலைக்காரனை வாங்கிய பிரபல நிறுவனம்

  | October 11, 2017 13:50 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • சிவகார்த்திகேயன் கைவசம் 4 படங்கள் உள்ளது
  • சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி வருகிறார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் & சிங்கிள் டிராக் செம லைக்ஸ் குவித்தது
‘ரெமோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படங்கள் மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ மற்றும் பொன்ராம் படம். இது தவிர கைவசம் ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் படம் மற்றும் விக்னேஷ் சிவன் படம் உள்ளது. இதில் ‘வேலைக்காரன்’ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறாராம். மேலும், ஃபகத் ஃபாஸில், சிநேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, சதீஷ், விஜய் வசந்த் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறதாம்.

’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இதற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். ஏற்கெனவே, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது, படத்தின் சென்னை சிட்டி வெளியீட்டு உரிமையை ‘SPI சினிமாஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ’24 AM’ நிறுவனமே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. படத்தை டிசம்பர் 22-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்