விளம்பரம்
முகப்புகோலிவுட்

ருமேனியா பறந்த ஸ்பைடர் படக்குழு

  | August 26, 2017 15:07 IST
Spyder Movie

துனுக்குகள்

  • மகேஷ்பாபு முதல் முறையாக தமிழில் அறிமுகமாகும் திரைப்படம், ‘ஸ்பைடர்’
  • இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்
  • வரும் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்
தெலுகு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு முதல் முறையாக தமிழில் அறிமுகமாகும் திரைப்படம், ‘ஸ்பைடர்’. தமிழ் மற்றும் தெலுகில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தை முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். நடிகர் பரத், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை ரகுல் பிரீத்தி சிங் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தும் வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில். ஒரே ஒரு பாடல் மட்டுமே மீதம் இருப்பதால் அதன் படப்பிடிப்பிற்காக நடிகர் மகேஷ்பாபு, ரகுல் பிரீத்தி சிங் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது ஐரோப்பாவில் உள்ள ருமேனியா நகருக்கு பறந்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலைகளில் படக்குழு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்