விளம்பரம்
முகப்புகோலிவுட்

அடுத்த படத்தின் அறிவிப்பினை செய்தார் இயக்குநர் ராஜமெளலி

  | March 18, 2017 16:33 IST
Celebrities

துனுக்குகள்

  • பாகுபலி 2 டிரையிலர் சமீபத்தில் வெளியானது
  • படத்தினை விளம்பரப்படுத்தும் வேலைகளில் உள்ளார் இயக்குநர்
  • என்னுடைய அடுத்த படத்தை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இந்திய சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குநராகிவிட்டார். இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

இந்த சூழ்நிலையில் அடுத்த மாதம் உலகம் முழுக்க வெளிவரவிருக்கும் பாகுபலி இரண்டாம் பாகத்தை விளம்பரபடுத்தும் வேலைகளை தற்போது தொடங்கிவிட்டது. டிரையிலர் வெளியீட்டு விழாவிற்காக சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குநர் ராஜமௌலியிடம் உங்கள் அடுத்தப்படம் என்ன என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்டனர்.

அதற்கு இயக்குநர் ராஜமெளலி கூறிய பதில் "இதுவரை நான் என்னுடைய அடுத்த படத்தை பற்றி முடிவு செய்யவில்லை, ஆனால், கண்டிப்பாக கிராஃபிக்ஸ், அனிமேஷன் சாராத படமாக தான் நிச்சயமாக இருக்கும்" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்