முகப்புகோலிவுட்

நடிகர் விஷாலிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சிம்பு வழக்கு

  | January 08, 2019 13:42 IST
Str

துனுக்குகள்

  • இத்திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார்
  • யுவன்சங்கர் ராஜா இசையில் வெளிவந்தது
  • தமன்னா, ஸ்ரேயா சரண், மஹத் ராகவேந்திரா, ஆகியோர் நடித்திருந்தனர்
நடிகர் விஷால் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீது சிம்பு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத் தோல்வியின் விரக்தியில் மைக்கேல் ராயப்பன் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக சிம்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், யுவன்சங்கர் ராஜா இசையில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தமன்னா, ஸ்ரேயா சரண், மஹத் ராகவேந்திரா, கணேஷ், மகேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படம் படு தோல்வி அடைந்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
 
மேலும் தன்னைப் பற்றி தவறாக மைக்கேல் ராயப்பன் பேட்டி கொடுப்பதாக சிம்புவின் புகாருக்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக சிம்பு புகார் அளித்துள்ளார்.
 
மைக்கேல் ராயப்பன் தனக்கு கோடிக்கணக்கில் சம்பள பணம் தர வேண்டியுள்ளது சம்பளத்தை கொடுக்காமல் தனக்கு எதிராக உண்மைக்கு மாறாக பேட்டி அளித்து வருவதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்.
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்