முகப்புகோலிவுட்

‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேறிய செண்ட்ராயனுக்கு சிம்பு கொடுத்த பரிசு

  | September 11, 2018 13:16 IST
Bigg Boss Tamil

துனுக்குகள்

  • விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ சீசன் 2
  • சமீபத்தில், நடிகர் செண்ட்ராயன் எலிமினேட் செய்யப்பட்டார்
  • சிம்பு செண்ட்ராயனுக்கு புத்தகம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ சீசன் 2. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் 1-யில் ஆரவ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், சீசன் 2-வில் நடிகர் மஹத் எலிமினேட் செய்யப்பட்டார். கிட்டத்திட்ட 80 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி நடிகர் செண்ட்ராயன் எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரபல நடிகர் சிம்பு செண்ட்ராயனை தன் வீட்டிற்கு அழைத்து திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்