முகப்புகோலிவுட்

‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேறிய செண்ட்ராயனுக்கு சிம்பு கொடுத்த பரிசு

  | September 11, 2018 13:16 IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ சீசன் 2. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் 1-யில் ஆரவ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், சீசன் 2-வில் நடிகர் மஹத் எலிமினேட் செய்யப்பட்டார். கிட்டத்திட்ட 80 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி நடிகர் செண்ட்ராயன் எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரபல நடிகர் சிம்பு செண்ட்ராயனை தன் வீட்டிற்கு அழைத்து திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    விளம்பரம்