விளம்பரம்
முகப்புகோலிவுட்

சிம்பு அந்த படத்தில் நான்கு கெட்டப்பில் வருகிறார்

  | March 20, 2017 11:16 IST
Aaa Movie Teaser

துனுக்குகள்

  • சமீபத்தில் "AAA" திரைப்படத்தின் டீஸர் வெளியாகியது
  • இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின
  • இந்த தகவலை கூறுவதால் இயக்குநர் என்னிடம் கோபித்து கொள்வார்
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தில் நடிகர் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். ஆனால், இப்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் சிம்பு இப்படத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்த செய்தியை நடிகர் சிம்புவே கூறியுள்ளார் எனபது தான் இதில் ஹைலைட்.

இந்த செய்தியை பற்றிஅவர் கூறியதாவது, 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' டீஸரை பார்த்துவிட்டு, நீங்களாகவே எந்த ஒரு கற்பனையும் செய்து கொண்டு இந்த கதை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு வித்தியாசமான திரைப்படம். நாங்கள் புதிதாக ஒரு முயற்சி இப்படத்திற்காக எடுத்துள்ளோம். இப்படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் வருவதால் இப்படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து வைத்துள்ளோம்.
இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களையும் தாண்டி மற்றொரு கதாபாத்திரமும் உள்ளது. மொத்தமாக நான்கு கதாபாத்திரங்களில் நான் நடித்துள்ளேன். இதை நான் வெளியிட்டதற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் கோபித்து கொள்வார் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் பராவாயில்லை, இதை வெளியிடுவதற்கு இதுதான் மிகச்சரியான நேரம் என்று தோன்றியதால் வெளியிட்டுவிட்டேன். அந்த நான்காவது கதாபாத்திரம் படத்தில் உங்களுக்கு நிச்சயமாக மிகவும் சர்ப்ரைஸாக இருக்கும், எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்