முகப்புகோலிவுட்

அடுத்த படத்திற்காக ஸ்டுடியோ க்ரீனுடன் இணைந்த நலன் குமாரசாமி

  | July 25, 2018 12:44 IST
Nalan Kumarasamy

துனுக்குகள்

  • ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி
  • சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நலன் குமாரசாமி கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்
  • இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
கோலிவுட்டில் விஜய் சேதுபதியின் ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இதனையடுத்து இவரது இயக்கத்தில் வெளியான படம் ‘காதலும் கடந்து போகும்’. இதிலும் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இவ்விரு படங்களுமே ரசிகர்களிடையேயும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, விஜய் சேதுபதி – இயக்குநர் தியாகராஜா குமாரராஜா கூட்டணியில் உருவாகும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு நீலன் கே.சேகர், இயக்குநர் மிஷ்கினுடன் இணைந்து நலன் குமாரசாமி கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். இந்நிலையில், நலன் குமாரசாமி இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளாராம். இப்படத்துக்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார் நலன் குமாரசாமி. வெகு விரைவில் இது தொடர்பான இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்