முகப்புகோலிவுட்

'விஸ்வாசம் படத்தில் 5 மாஸான சண்டைக்காட்சிகள்' – சொல்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்

  | June 18, 2018 12:16 IST
Dhilip Subbarayan

துனுக்குகள்

  • அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் படம் `விஸ்வாசம்'
  • இது இவர்களது கூட்டணியில் நான்காவது படம்
  • நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘தல’ அஜித்தின் 58வது படமான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் முதல் ஷெட்யூல், ஹைதராபாத்தில் 30 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. ‘தல’ அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, போஸ் வெங்கட், ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக், மதுமிதா மற்றும் பலர் நடிக்கும் இத்திரைப்படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குநராக திலீப் சுப்பராயன் பணியாற்றி வருகிறார்.

தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ‘விஸ்வாசம்’ படத்தைப் பற்றி பேசிய திலீப் சுப்பராயன், ‘விஸ்வாசம் படத்தில் ஐந்து சண்டைக்காட்சிகள் உண்டு. ஒவ்வொரு ஃபைட் சீனுமே, ஒவ்வொரு ஸ்டைலில் இருக்கும். எல்லா சண்டைக்காட்சியுமே ரசிகர்களிடையே பெரிதாக பேசப்படும்’ என கூறியுள்ளார்.

இப்படத்தின் மூலம் நடிகர் அஜித்திற்கு முதன்முதலாக சண்டை இயக்குநராக பணிபுரியும் திலீப் சுப்பராயன், தனது கேரியரை அஜித்தின் ‘ஜி’ படத்தில் ஒரு சாதாரண ஃபைட்டராக தொடங்கியதைப் பற்றியும் பெருமையாக நினைவு கூறுகிறார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்