முகப்புகோலிவுட்

'பேட்ட' ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் காம்போவின் தெறி மாஸ் மோஷன் போஸ்டர்!

  | September 07, 2018 19:34 IST
Rajini 165

துனுக்குகள்

  • கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கிறது
  • இது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் 165-வது படமாம்
  • இதில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார்
பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக வலம் வரவுள்ளாராம். ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர்.
 

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்கு ‘பேட்ட' என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதோடு, படத்தின் மோஷன் போஸ்டரையும் ஷேரிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்