விளம்பரம்
முகப்புகோலிவுட்

மக்கள் செல்வனின் படத்தை வாங்கிய ‘சூரியன்’ குழுமம்

  | January 11, 2018 17:14 IST
96 Movie

துனுக்குகள்

  • இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குகிறார்
  • விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடும் முதல் படமாம்
  • இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்
பன்னீர் செல்வமின் ‘கருப்பன்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘96’. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கி வரும் இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் வலம் வரவுள்ளாராம். கோவிந்த் மேனன் இசையமைத்து வரும் இதற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார், ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து வருகிறார்.

சமீபத்தில், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். தற்போது, படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ‘சன் டிவி’யே தங்களது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்