விளம்பரம்
முகப்புகோலிவுட்

டோலிவுட்டில் சந்தீப் கிஷன் பறக்கவிட்ட ‘பலூன்’

  | October 06, 2017 12:22 IST
Director Sinish

துனுக்குகள்

  • இப்படத்தில் ஜெய்-க்கு ஜோடியாக டபுள் ஹீரோயின்ஸாம்
  • இதனை தெலுங்கிலும் டப் செய்து ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
  • ‘மழை மேகம் - SHUTUP பண்ணுங்க’ பாடல்கள் செம லைக்ஸ் குவித்தது
‘சென்னை 28 : செகண்ட் இன்னிங்க்ஸ், எனக்கு வாய்த்த அடிமைகள்’ படங்களுக்கு பிறகு ஜெய் நடிப்பில் விறுவிறுப்பாக ரெடியாகி வரும் படம் ‘பலூன்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் என்பவர் இயக்குகிறார். இதில் ஜெய்-க்கு ஜோடியாக ஜனனி அய்யர், அஞ்சலி என டபுள் ஹீரோயின்ஸாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

’70 MM எண்டர்டெயின்மெண்ட் - ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இதனை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிடவுள்ளார். இதுவும் தமிழ் சினிமாவில் டிரெண்டு அடித்துக் கொண்டிருக்கும் ஹாரர் ஜானராம். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், வெளியான இதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் ‘மழை மேகம் - SHUTUP பண்ணுங்க’ பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது, படத்தை தெலுங்கிலும் டப் செய்து ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது ‘PUSHYAMI ஃபிலிம் மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம். தெலுங்கு வெர்ஷன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சந்தீப் கிஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர் டோலிவுட் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. வெகு விரைவில் படத்தின் டிரையிலர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்