முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஸ்டேட்டஸ்

  | January 09, 2018 13:44 IST
Super Deluxe Movie

துனுக்குகள்

  • இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கிறார்
  • இயக்குநர்கள் மிஷ்கின் - நலன் குமாரசாமி கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளனர்
  • அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளதாம்
‘கருப்பன்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. ‘ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் இதில் விஜய் சேதுபதியுடன் ஃபகத் ஃபாஸில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக வலம் வரவுள்ளாராம்.

தியாகராஜன் குமாரராஜாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘Tyler Durden And Kino Fist’ மூலம் தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு பி.எஸ்.வினோத் – நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கின்றனர், நீலன் கே.சேகர், இயக்குநர்கள் மிஷ்கின் - நலன் குமாரசாமி இணைந்து கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளனர்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட விஜய் சேதுபதியின் கேரக்டர் (ஷில்பா) லுக் ஸ்டில் மற்றும் சமந்தா கேரக்டர் (வேம்பு) டீஸர் சமூக வலைதளங்களில் வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. தற்போது, படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று (ஜனவரி 9-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஷெடியூலில் மிஷ்கின் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளனராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்